சனி, 14 ஜனவரி, 2017









21-8-2016 இல் “தமிழ் ‘ழ’கர நூலகம்” தொடக்கவிழா.
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கமும் தமிழ் ‘ழ’கரப்பணிமன்றமும்  இணந்து  மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் “தமிழ் ‘ழ’கர நூலகம்” தொடக்கவிழா   பாவூர்சத்திரம் கடையம் சாலையில் உள்ள ‘வே.ஆறுமுகநாடார் நகரில்’ வே.ஆறுமுகநாடார் வளாகத்தில் 21-8-2016  ஞாயிறு காலை 10 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் மண்டலத் தலைவர் அரிமா கே.சக்திவேல் அவர்கள் நூலகத்துக்கு முன்பு  மரக்கன்றுகள் நட்டபின் விழா அரங்கில் விழா தொடங்கியது.
கல்லூரணி பேரூராட்சித் தலைவர் அரிமா எம்.இராமசாமி (எ) தமிழ்செல்வன் அவர்கள் தலைமை தலைமை தாங்கினார்கள். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவர் சி.முருகன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தினை திருமதி த.கலாவதி ஓவிய ஆசிரியை அவர்கள் பாட விழா தொடங்கியது. பாவூர்சத்திரம் தமிழ் ‘ழ’கர நூலகத்தின் பொறுப்பாளர் அரிமா த.அந்தமான் அருண் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள்.
கீழப்பாவூர் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர், இலக்கியக் காவலர் திரு.எஸ்.செல்வன் அவர்கள்  தமிழ் ‘ழ’கர நூலகத்தை  தொடங்கி வைத்து பேசினார்கள். நிகழ்ச்சியை கண்தான விழிப்புணர்வுக்குழு நிறுவனரும் கண்தான மாவட்டத்தலைவ்ருமான கே.ஆர்.பி.இளங்கோ அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் கீழப்பாவூரைச் சேர்ந்த பணிநிறவிவு பெற்ற தலைமை ஆசிரியர் திரு.துரைராஜ், கீழப்பாவூர் தந்தை பெரியார் குருதி மற்றும் விழிக்கொடைக் கழக நிறுவனர் அய்.இராமச்சந்திரன், கீழப்பாவூர் பேரூரட்சித் தலைவர் அரிமா பொன்.அறிவழகன், ஆசிரியர் பாலசுப்பிரமணியசிங், பாவூர்சத்திரம் த.பி.அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஓவியர் தமிழன்,ஆகியோர் சிறப்பாகப் பேசினார்கள்.

விழாவிற்கு கீழப்பாவூர் பேரூராட்சித் தலைவர் அரிமா பொன் அறிவழகன், அரிமா. முருககிங்க்ஸ்டன், அரிமா பி.இரவீந்திரன், அரிமா வி.சுப்பையா பாண்டியன், அரிமா எஸ்.கே.முருகன், திருமதி சௌந்தரா அந்தமான் அருண், வள்ளுவர்நேசன் இரா.சந்திரன், ஊத்துமலை காவல்த்துறை துணை ஆய்வாளர் திரு து.சண்முகராஜன், திரு ச,மன்மததுரை, திரு.அய்யன், ஆகியோர் கலந்து கொண்டனர். திருமதி த.கலாவதி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை தமிழில் எப்படி பாடுவது என்று இசையோடு பாடிக் காட்டினார்கள். இறுதியில் அரிமா ஆர்.கலைச்செல்வன் அவர்கள் நன்றி கூற விழா நிறைவடைந்தது.

ஞாயிறு, 8 நவம்பர், 2015

திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் 13-9-2015 இல் "தமிழ் ழகரப்பணி மன்றத்தின் புதிய கிளை மற்றும் நூலகம் தொடங்கப்பட்டது. விழாப்படங்களில் சில.....








சனி, 7 நவம்பர், 2015

சில புகைப்படங்கள்

தமிழ் ழகரப்பணி மன்றம், அந்தமான்.
அந்தமான் அருண், கடலூர் அ.தேவநாதப் பாவாணர் மற்றும் எழிலரசு
                                            தமிழ் ழகரப்பணி மன்றம், வத்தலகுண்டு.

“ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர் “நிறுவனர், மாநிலத்தலைவர்” அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு.


“ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர் “நிறுவனர், மாநிலத்தலைவர்” அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு.
1.    பெயர்                                     :கவிஞர். கடலூர் அ.தேவநாதன்
2.    அப்பா பெயர்                        :அப்பாவு
3.    பிறந்த நாள்                           :1.7.1933
4.    ஊர்                                         :கடலூர், கடலூர் மாவட்டம்
5.    கல்வித்தகுதி                         :பள்ளி இறுதி வகுப்பு SSLC
6.    தற்போதைய முகவரி           :ப.எண் 13, பு.எண்.5, குலாம் முகமது மைதீன் தெரு,
                                                ஆயிரம்விளக்கு,சென்னை-600006,செல்: 9380838733.
7.    வகித்த பதவி                         :தொழிலாளர் அலுவலர், சென்னை (பணி ஓய்வு)

8.    இலக்கியப் பணிகள்             :மீண்டும் கவிக்கொண்டல், செந்தமிழ் முரசு ஆகிய
இலக்கியஇதழ்களில் துணை ஆசிரியராகவும், தமிழ் மூவேந்தர் முரசு இதழின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறேன். தற்போது உழைப்பவர் உலகம் இதழின் பத்திரிக்கையாளராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் இருக்கிறேன்.

9.    ஈடுபாட்டுடன் செயல்பட்ட
பிற தமிழ் மன்றங்கள்                       :1.தலைநகர் தமிழ்ச் சங்கம்.
 2.முத்தமிழ் ஆய்வு மன்றம்.
                                                             3.வி.ஜி.பி.உலகத்தமிழ்ச் சங்கம்.
 4.தாய்மண் இலக்கியக் கழகம்.
 5.கண்ணதாசன் இலக்கியப் பேரவை.
 6.திருவள்ளுவர் உலகத் தமிழ்ச்சங்கம்.
 7.கவிதை உறவு.
 8.உலகத் திருக்குறள் மையம்.
 9.தமிழ்ச் சான்றோர் பேரவை
10.உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்.
11.முத்தமிழ் முற்றம்.
12.எழுத்துலகப் பெருமன்றம்.
13.உரத்த சிந்தனை.
14.பாரதி கலைக்கழகம்.
15.வானவில் பண்பாட்டுக்கழகம்.
10. சொந்த மன்றப் பணிகள்      : ‘தமிழ் ழகரப்பணி மன்றம்’ என்ற அமைப்பை 1975 முதல்
தொடர்ந்து நடத்தி வருகிறேன். தமிழ் மொழியின் இனிய அமுத ஒலிப்பான ‘ழ’கரத்தைத் தமிழர்களே பிழையாக தமில்/ள், மொலி/ளி, வளி/லி, அள(ல)கு, வால்க, கீளே …  என, ழகரச் சொற்களுக்கு மேற்சொன்னவாறு ல/ளகர ஒலிப்பாக்கி, ஒரே நேரத்தில் மூவொலியையும் மாற்றி மாற்றி, பொருளையும் பலவாறு கெடுத்து ’ழ’ கரத்தை உளறுதலாகப் பேசும் முறைகளைத் தடுத்துத் திருத்த வேண்டும் என்ற கொள்கையுடன், அந்தக் கீழ்மையை ஊக்குவிக்கும் அமைப்புகளாக விளங்கும் வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள், கல்வித்துறையினர் ஆகியவர்களுடன்  போராடியிருக்கிறேன். இதற்காக ஆண்டுதோறும் முப்பெரும் விழா 1.ழகரத்திருவிழா, 2.திருவள்ளுவர் பிறந்தநாள் விழா, 3.பொங்கல் விழா என்று கொண்டாடி வருகிறேன். மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் ழகரப்பயிற்சி இலவசமாகக்  கொடுத்து வருகிறேன். பல ஆயிரக்கணக்கானோர் திருத்தப் பட்டுள்ளனர். பள்ளிகளில் ழகர விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்கள் நடத்தி வருகிறார். பல ஆயிரம் அறிக்கைகள் தனது சொந்தச் செலவில் அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறேன்.
11. கிளை மன்றங்கள்                 :1.திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு 
                                                       2.திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, 
                                                       3.தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர், 
                                                       4.அந்தமான் நிக்கோபார்த் தீவுகளில் பாத்துபஸ்தி 
                     ஆகிய ஊர்களில் கிளை மன்றங்கள் இயங்குகின்றன. அங்கெல்லாம் ழகரப் பயிற்சி இலவசமாக அளித்து சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

12. எழுத்துப் பணிகள்                :கீழ்க்கண்ட இதழ்கள், நாளேடுகள், வார ஏடுகள் ஆகியவற்றில்
                                                என் படைப்புகள் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும்
வெளிவந்துள்ளன.
1.    கல்கண்டு இதழ் (12.6.1997) பக்கம் 26 இல் ழகரம் பற்றி எழுதியதை வெளியிட்டு ஆதரவு தெரிவித்துள்ளது.
2.    மீண்டும் கவிக்கொண்டல்
3.    தமிழ் மாருதம்
4.    தமிழ்ப்பாவை
5.    தமிழ்ப்பணி
6.    தமிழ் நலக்கழகம்
7.    தோழமை
8.    தேனாறு
9.    தமிழ்ப்பொழில்
10. செந்தமிழ்ச் செல்வி
11. உண்மை
12. விஞ்ஞ்சானச் சுடர்
13. தமிழ் மூவேந்தர் முரசு
நாளேடுகள்                           1.விடுதலை
                                                2.தி இந்து (THE HINDU)    
                                                3.தினமணி
4.தினபூமி
                        வார ஏடுகள்              1.விஜயபாரதம்
                                                            2.ஆனந்த விகடன்
                                                            3.இதயம் பேசுகிறது
                                                            4.வாராந்திர ராணி
                                                            5.கதைச்சோலை
போன்ற பல இதழ்களிலும் நேரில் பேட்டி கண்டு எழுதியுள்ளனர். ஒவ்வொரு இதழும் ழகரம் பற்றி அள்ளித் தெளித்துள்ள கருத்துகள் அனைவரும் படித்து சிந்திக்க வேண்டியவைகளாகும்.

13. பெற்றுள்ள பட்டங்கள், விருதுகள்
1.    தமிழ்க் கொடை முரசு
2.    மொழிப் போர் மறவர்
3.    திருக்குறள் தொண்டர்
4.    ழகர விழி எழிலர்
5.    மொழி காக்குநர்
6.    செந்தமிழ்ப் புரவலர்
7.    ழகர நாயகர்
8.    தமிழ்ச் சிகரம்
9.    தமிழ்ச் செம்மல்
10. கவிப்புனல்
11. சமூகத் தொண்டன்
12. ழகர ரத்தினா
13. ழகரத் தங்கம்
14. கண்ணியச் செம்மல்
15. சேவை ஒளி விருது
16. ழகர ஞாயிறு
17. ழகரத் தேனி
18. ழகர வைரம்
19. தமிழறிஞர்
20. தமிழ்த் தொண்டன்
21. மனிதநேய மாமணி
22. ழகர வேந்தர்
23. ழகரப் போர்வாள்
24. தமிழ் ழகர முரசு
25. ழகரக் காவலர்
26. அறநெறி வேந்து
27. மனிதநேய வேந்து
28. ழகரத் தலைவர்
29. ழகரக் காவலர்
30. ழகரப் பவழம்
31. எழுத்து வித்தகர்
32. பாரதி விருது
33. சாதனையாளர் விருது
34. ழகர இமயம்
35. ழகரச் சிகரம்
36. ழகரச் சிற்பி
37. கண்ணதாசன் தொண்டர்
இவ்விதம் 45 விருதுகள் அளித்து சிறப்பித்த தமிழ் அமைப்புகள், இலக்கியத் தமிழ் ஆசிரியர்கள், கவிஞர்கள் மற்றும் சான்றோர்கள் அனைவருக்கும் நன்றி.

14. மன்றம் பிறருக்கு அளித்த பட்டங்கள்:
1.    தமிழ்க் கவிக் கிழார்
2.    ழகரம் கொண்டார்
3.    செஞ்சொற்கிழார்
4.    ழகர மாலையார்
5.    தனித் தமிழ் முரசு
6.    கவனகப் பழம்
7.    கல்வி செழிச் செல்வர்
8.    தனித் தமிழ்ச் செல்வர்
9.    ழகரம் உணர்ந்தோர்
10. கல்விச் செம்மல்
11. குறளிசை செல்வர்
12. ஈடிலா இணையர்
போன்ற விருதுப் பெயர்கள் 86 பேர்களுக்கு சென்னை, ‘தமிழ் ழகரப் பணிமன்றம்’ சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

15. எழுதிய நூல்கள்
1.    வானருவி
2.    ழகரம் தமிழின் சிகரம்
3.    ழகரத் தமிழமுதம் (அச்சில்)

16. தனிச் சிறப்புகள்
·         மொழிப்போராட்டங்களில் கலந்து கொண்டு இருமுறை தளைப் பட்டுள்ளேன்
·  பாவேந்தர் பிறந்த நாள் விழா ஏப்ரல் 27 –ல் ஆண்டுதோறும் தொடர்ந்து புதுச்சேரி சென்று கவிஞர் குழாத்துடன் ஊர்வலம் சென்று பாவேந்தர் நினைவில்லத்தில் பாமலையுடன் பூமாலையும் சூட்டி வந்துள்ளேன்.
· தாய்லாந்து, பாங்காக், அந்தமான், ரிஷிகேசம்,பம்பாய்,சென்னை,மதுரை போன்ற இடங்களில் நடந்த தமிழ் மாநாடுகளில் கலந்து கொண்டு ழகரப் பரப்புரை செய்துள்ளேன்.
·     2007 செப்டம்பர் 27,2829 –ல் சென்னை, சவேரா உணவகத்தில் நடந்த 37 – வது உலகக் கவிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, காலையில் தமிழ்க் கவிஞர்கள் முன்னிலையில் பாடிய பாடிய திருக்குறள் முதல் குறளுக்கு அளித்த புதிய விதத்திலான பொருளுரையும் கொண்ட ஆங்கிலக் கவிதையும் பெருத்த கைதட்டல்களுடன் பாராட்டையும் வாங்கியது சிறப்பு.
17. இதர சிறப்புகள்
Ø  தமிழகத்தின் ‘பிரபலமானவர்கள் விலாசங்கள்’புத்தகங்கள் (கல்கண்டு வெளியீடு) தமிழறிஞர்கள், கல்வியாளர்கள் பட்டியலில் என் பெயர் இடம் பெற்றுள்ளது சிறப்பு.
Ø  டாக்டர் மு.க.சிவம் அவர்கள் தமிழகத்தின் 100 தமிழறிஞர்களை  பேராசிரியர் க.அன்பழகனார் அவர்களால் சிறப்பித்துப் பாராட்டிய விழாவில் எனது பெயர் 37-வது எண்ணில் இருந்ததும் மற்றொரு சிறப்பு.
Ø  ராணி வார இதழ் நிருபர் மூலம் பேட்டி கண்டு எழுதிய போது (11-5-2009) தமிழறிஞர் என்று மனமுவந்து பாராட்டியுள்ளது.
Ø  ஒரு மொழியின் (தமிழ்) ஒரு எழுத்தொலி(ழ)யின் வீழ்ச்சியை கடந்த 3000 ஆண்டுகளாக யாரும் கண்டறியாத ஒரு மாபெருங்குறையைக் கண்டு பிடித்து, அதை நிவர்த்திக்க  தேவநாதன் எடுத்த முயற்சி கின்னஸ் சாதனையில் வரவேண்டிய ஒன்று என்று உவமைக்கவிஞர் சிரதா அவர்கள் அடிக்கடி எடுத்துச் சொல்வார்கள். இதே கருத்தை பல கவிஞர்களும் கூறியுள்ளார்கள்.
Ø  2004 மே 24ல் அந்தமான் (போர்ட்பிளேயர்) வானொலியிலும், 2007 ல் சென்னை வானொலியிலும் ழகரச் சிறப்புப் பற்றியும் மற்றும் ஒருமுறை பொதுத் தலைப்பிலும் உரையாற்றியது ஒலிபரப்பு ஆகியுள்ளது.
Ø  மக்கள் தொலைக்காட்சியின் “சங்கப்பலகை” நிகழ்ச்சியில் தோழர் தியாகு அவர்களுடன் 21.11.2009 ல் ழகரம் பற்றிய உரையாடல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. தமிழும் மணமும் தலைப்பில் 30 நிமிட உரை இமயம் தொலைக்காட்சியில் 24.112012ல் ஒளிபரப்பாகியது.
Ø  ழ,ள,ல; ர,ற; ந,ன,ண ஆகிய வ்ழுத்தொலிகள் பிறக்கும் முறைக்கு ஒலிப்புப் பயிற்சிக்காக ஒரே படத்தில் நான் வரைந்து அனுப்பியதை, தமிழக அரசுஇ அப்படியே ஏற்று, “அறிவியல் தமிழ்ப்பாடநூல்” முதல் வகுப்பு முதல் அனைத்து பாடநூல்களிலும் ஒரு பக்க அளவில் வெளியிட்டுள்ளது தனிச்சிறப்பு. ஏற்கனவே ஒரு எழுத்துக்கு ஒன்றாக 8 எழுத்துகளுக்கும் 8 முகங்களுள்ள படங்கள் இருந்ததை அகற்றி விட்டனர்.
Ø  TAMILNADU (டமில்நடு) என்பது தமிழ்நாடு என்ற தமிழ் ஒலிப்புக்கு மாறுபட்டுள்ளது விளங்கும். ஆதலால் THAMIMAZH NAADU (தமிழ்நாடு) என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கோருவது நியாயம் தானே? தமிழர்கள் விழிப்படைய வேண்டும். அது எப்போது?
Ø  தொல்காப்பியம் தோன்றிய காலம் முதல் எழுத்தியல் அதிகாரச் செய்யுள் 95-ல் சொல்லியுள்ள கருத்து ‘நுனிநா அணரி அண்ணம் வருடினால் ‘ர’,’ழ’ ஆயிரண்டும் பிறக்கும்’ என்பதாம். இத்தனை ஆண்டுகளாகியும் நுனிநா அண்ணம் வெருடினால் ‘ர’ ஒலி வரும் ; ‘ழ’கரம் பேசுகையில், வராது என்பதை எந்த ஒரு அறிஞரோ,புலவரோ, முனைந்து ஆய்ந்த முனைவர்களோ ஆய்ந்து கண்டதுமில்லை. உண்மையைச் சொன்னதுமில்லை. பாடலில் கண்டதுபோல் அண்ணம் வருடினால், நாவருடும் இடத்துக்கும் அழுத்தத்துக்கும் ஏற்ப ‘ல’ அல்லது ‘ள’ ஒலியாக மாறிவரும் என்ற உண்மையை ஆய்ந்துச் சிந்தித்து எடுத்துச் சொன்ன ஒரே நபர் அடியேந்தான்.இந்தப்பாடலின் காரணத்தால்தான் தமிழர்களின் உளருதல் (வாளைபளம்) ப்வ்ச்சு எல்லாரிடமும் நீடிக்கிறது என்பேன்.
Ø குறள்கள் 464,654,970,971,988,1044,1066,1288,1298ஆகியவற்றில் இழிவு என்ற பொருளில் உள்ளதை இளிவு,இளிவு என்றே வந்துள்ளது. தமிழ் ழகரப்பணி மன்றத்தைப் பொறுத்தவரை பொறுத்துக் கொள்ள முடியாத வருத்தப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது என்று எடுத்துச் சொல்லி வருகிறேன். வேறு எவரும் கவலைப்பட்டது இல்லை.
Ø இலத்தீனிலிருந்து வந்த ஆங்கில எழுத்துகள் யாவும், கி.மு.3-ஆம் நூற்றாண்டில்  நடைமுறையில் இருந்த தமிழி (தமிழ் பிராமி) எழுத்துருக்களுக்கு எப்படியாவது ஒரு கோணத்தில் ஒத்திருப்பதை ஆராய்ந்து சொல்லி இது பற்றி ஆய்வுக்கு எடுத்து முடிவு அறிவிக்க முன்னாள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பொற்கோ) அவர்களிடம் கேட்டு  அந்தக் கட்டுரையையும் அளித்தேன். அவருக்குப்பின் வந்த இன்னாசி முத்து அவர்களிடமும் அளித்தேன். நடவடிக்கை இல்லை.
Ø  தமிழகத்தில் தமிழே படிக்காமல் பட்ட மேல் படிப்பு வரை முடித்து விடுகிறார்கள் என்கிறார்கள் பல தமிழறிஞர்கள். ஞாயம்தான். தமிழ் ழகரம் பேசத்தெரியாமலேயே தமிழ் ஆசிரியர்களும், பேராசிரியர்களும், புலவர்களும், தமிழறிஞர்களும் கல்விமாங்களாகப் பலரும் உலாவருகிறார்களெ. இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டமும் கூட தமிழகத்தில் பெறுவது என்பது என்ன ஞாயமென்று கேட்கிறேன்?
Ø  “தெரு விளக்குகள் தேவை இல்லை. ஊருக்கு அல்லது நாட்டுக்கு ஒரு விளக்கு என்று ஆகாயத்தில் நிலை நிறுத்தி  ஒளிவீசும் காலம் நெடுந்தூரத்தில் இல்லை.” என்ற கட்டுரை ஒன்றும் வடித்திருந்தேன்.
Ø  ‘அகர முதல எழுதெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உ’லகு’

‘அ’ எழுத்திலிருந்துதான் எல்லா தமிழ் எழுத்துகளும் உருவாகின என்று தமிழறிஞர் பா.வே.மாணிக்கா நாயகர் ஆராய்ந்து படம் போட்டு எழுதிய நூல் ஏற்புடையது அல்ல. ஏனெனில் திருவள்ளுவர் காலத்தில் ‘அ’ எழுத்து வடிவம் இல்லை.தமிழ் பிராமி  ‘    ‘ இதுதான் வள்ளுவர் காலத்திய ‘அ’ எழுத்து. இன்னும் ஒருபடி முன்னே போனால் சிந்துவெளி எழுத்தில் ‘அ’என்பது ‘   ‘ என்ற வடிவத்தில் இருந்துள்ளபோது ‘அ’ எழுத்திலிருந்துதான் எல்லா எழுத்துகளும் பிறந்தன என்பது எப்படி சரியாகும் என்று ஆய்ந்து ஒரு கட்டுரை எழுதியுள்ளென்.

இப்படி எனது  ஆழ்ந்த சிந்தனைகள் உண்மைகளை உரித்துக் காட்டுவதாகத்தான் இருக்கும்.
இவண்,
“ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர்
தமிழ் ழகரப்பணி மன்றம்
13/5 குலாம் முகமது முகைதீன் தெரு,
ஆயிரம் விளக்கு சென்னை -600 008